(1) பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (”விதிகள்”) இந்த டெமோ டிரேடிங் போட்டி விதிகளுக்குப் பொருந்தும் (”நிகழ்வு”). இந்த நிகழ்வில் வெற்றிகரமாகப் பங்கேற்பதன் மூலம், பின்வரும் விதிகள் அனைத்துக்கும் இணங்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த நிகழ்வை நாங்கள் வழங்குகிறோம். முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் நிகழ்வினை மாற்றியமைக்க அல்லது இரத்து செய்ய எங்களுக்கு உரிமையுள்ளது.
(2) இந்த விதிகளில் விளக்கப்படாத எந்த விதிமுறைகளும் எங்கள் தயாரிப்பு வெளிப்படுத்துகை அறிக்கை அல்லது வாடிக்கையாளர் ஒப்பந்தத்திலுள்ள தொடர்புடைய விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளன.
தகுதிகள்
(3) நிறுவனம் தனது முழு விருப்பத்தின் பேரில், கணக்கு திறப்பதற்க்குத் தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்யும் வாடிக்கையாளர்களுக்கு (”தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்கள்”) இந்த நிகழ்வை வழங்குகிறது. ஒரு தகுதியான முதலீட்டாளர் நிறுவனத்தின் வாடிக்கையாளராகவும் செல்லத்தக்க தனிப்பட்ட கணக்கை (”கணக்கு”) கொண்டிருப்பவராகவும் இருக்க வேண்டும்.(A) முதலீட்டாளர் குறைந்தது 18 வயதுடையவராகவும், நிறுவனத்துடன் எந்தக் கணக்கும் பதிவு செய்யாதவராகவும் இருக்க வேண்டும்.(B) இந்த நிகழ்வில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் நேரடிக் கணக்கு திறப்பதற்கான நிபந்தனைகளுக்கும் அடையாளம் உறுதிப்படுத்தலுக்கும் உட்பட்டவர்கள்.
விதிகள்
(4) நிகழ்வு நேரம்: 2023-03-01 ~ 2023-03-31.
(5) ஒவ்வொரு தகுதிவாய்ந்த முதலீட்டாளரும் ”தினசரி டிரெண்டு வேட்டையில்” ஒரு டிரேடிங் நாளுக்கொருமுறை பங்கேற்கலாம்.
r- மூன்று சரியான ஊகங்களை நீங்கள் சேர்த்தபின் அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்கள்.
r- 3 அதிர்ஷ்ட முதலீட்டாளர்கள் தானாகவே கணினியால் ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுக்கப்பட்டு $50 USD ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
(6) ”மாதாந்திரத் தரவரிசை” வெற்றியாளர்கள் பின்வரும் பரிசுகளை அவர்களது தரவரிசைக்கேற்ப பெறுவார்கள்.
r1வது இடம்: $300 USD ரொக்கம்
r2வது இடம்: $200 USD ரொக்கம்
r3வது இடம்: $100 USD ரொக்கம்
(7) இந்த நிகழ்வின் வெற்றியாளர்களை அறிவிக்கும் நேரம் பின்வருமாறு:
- வேட்டைக்குப் பின் 1 மணி நேரத்துக்குள் அறிவிப்பு வெளியாகும்.
- ”தினசரி அதிர்ஷ்டக் குலுக்கல்” வெற்றியாளர்கள் தினசரி 10:00 (GMT+X) மணிக்கு அறிவிக்கப்படுவர்.
- ”மாதாந்திர தரவரிசை” வெற்றியாளர் அதற்கடுத்த மாதத்தின் முதல் நாளில் அறிவிக்கப்படுவார்.
(8) இந்த நிகழ்வுக்கு வழங்கப்படும் ரொக்கப்பரிசு பின்வரும் நேரங்களில் வழங்கப்படும்:
- ”தினசரி டிரெண்டு வேட்டையில்” வெற்றியாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளில் கணினி தானாகவே ரொக்கப் பரிசினை முதலீட்டாளரின் டிரேடிங் கணக்கிருப்பில் வரவு வைக்கும்.- ”மாதாந்திர தரவரிசையில்” வெற்றியாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளில் கணினி தானாகவே ரொக்கப் பரிசினை முதலீட்டாளரின் டிரேடிங் கணக்கிருப்பில் வரவு வைக்கும்.
(9) இந்த நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் ஈட்டப்படும் ரொக்கப்பரிசு தானாகவே முதலீட்டாளரின் டிரேடிங் கணக்கிருப்பில் கணினியால் வரவு வைக்கப்படும். இத டிரேடிங் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம்; வெளியே எடுக்கவும் செய்யலாம். (எடுப்புக்கு எந்த விதிமுறைகளோ நிபந்தனைகளோ இல்லை).
(10) இந்த நிகழ்வில் பங்கேற்க முதலீட்டாளர் ஒப்புக்கொண்டால் (அதாவது நிறுவனத்துடன் ஒரு டிரேடிங் கணக்கை வெற்றிகரமாகப் பதிவுசெய்துள்ள பங்கேற்பாளர்), அதன் அர்த்தம் நிறுவனம் முதலீட்டாளரின் தனிப்பட்ட தகவல்களை செயலியில் பகுதியளவு பதிவிட ஒப்புக்கொள்கிறார் என்பதாகும். மேலும் விபரங்களுக்கு, எங்களது சட்ட ஆவணங்களைப் பார்க்கவும்.
(11) இந்த நிகழ்வு குறிப்பிட்ட நாடுகள்/பிரதேசங்களில் மட்டுமே கிடைக்கப்பெறும். இந்த குறிப்பிட்ட நாடுகள்/பிரதேசங்களில் உள்ள முதலீட்டாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க ஒரு கணக்கைத் திறக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிடில், அனைத்து அழைப்புகளும் செல்லாததாகக் கருதப்படும். பொருந்தக்கூடிய நாடுகள்/பிரதேசங்கள் எங்களது உள்ளகக் கொள்கைகளைப் பொறுத்தது; அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்கும்முன் வாடிக்கையாளர்கள் எங்களது இணையவழி வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தபப்டுகிறார்கள்.
சட்டம்
(12) இந்த நிகழ்வினால் எழும் எந்தவொரு பரிவர்த்தனி இழப்புக்கும் வாடிக்கையாளரின் சொந்த டிரேடிங் முடிவுகளுக்கே முழு பொறுப்பு உள்ளது. இந்த நிகழ்வின் முழு நடுவராக நாங்கள் இருக்கிறோம். இந்த விதிகளில் கூறப்படாதவற்றில் சர்ச்சை அல்லது விவகாரம் எழும்போது, நிறுவனத்தின் மேலாண்மை அதில் உள்ளடங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் நியாயமான முறையில் தீர்த்துவைக்கும். அத்தகு முடிவு சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருக்கும் இறுதியானதாக இருக்கும்.
(13) முதலீட்டாளர்கள் பெறும் கமிஷன்கள் அவர்கள் டிரேடிங் கணக்குகள், மார்ஜின் கால்கள் அல்லது வாடிக்கையாளரின் பரிவர்த்தனைகளினால் எழும் பிற இருப்புகளின் எதிர்மறை இருப்புகளை ஈடுகட்டப் பயன்படுத்தப்படும்.
(14) நிகழ்வு காலத்தில் யாரேனும் தவறாகப் பயன்படுத்தியதாக, டிரேடிங் அல்லது செயல்பாட்டை மீறியதாக, ஏதேனும் ஓட்டைகளைப் பயன்படுத்தினாலோ, பிழைகள், நிறுவன நடவடிக்கைகளின் தோல்விகள் அல்லது குறைபாடுகளை மோசடிக்குப் பயன்படுத்தினாலோ அல்லது ஏதேனும் வெகுமதிகளைப் பெற்றாலோ, அடையாளத்தை தவறாகச் சித்தரித்து சலுகைகள் அல்லது பிற பலன்கள் (ஏதேனுமிருப்பின்) பெற்றிருந்தாலோ, தானியங்கி வழிகளில் அல்லது பிற சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் ஈடுபட்டாலோ, மற்றும் வழக்கமான பரிவர்த்தனைகளின் வரைவெல்லையைத் தாண்டி ஏதேனும் பலன்களை அடைந்தாலோ, அல்லது ஏதேனும் வாடிக்கையாளர் ஒப்பந்தம், தயாரிப்பு வெளிப்பாட்டு அறிக்கைகள் அல்லது பிற சட்ட ஆவணங்களில் மீறல் செய்தாலோ, அத்தகு நபரின் கணக்கினை இரத்து செய்ய அல்லது இடை நிறுத்தவும், அந்நபரை இந்த விதிகளின் பிரகாரம் நிகழ்விலிருந்து தகுதிநீக்கம் செய்யவும் நிறுவனம் முழு விருப்புரிமை கொண்டுள்ளது. அத்துடன் வழங்கப்பட்ட ஏதேனும் பரிசுகள் இருப்பின் அவற்றை மீட்கும் உரிமையையும் கொண்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வுடன் தொடர்புடைய எங்கள் செயற்தளத்தின் ஏதேனும் கடப்பாடுகளும் தள்ளுபடி செய்யப்படும்.
(15) எந்த நேரத்திலும் இந்த விதிகளின் அனைத்து அல்லது ஏதேனும் ஒரு பகுதி சட்டத்துக்குப் புறம்பானது, ஒரு ஆட்சியெல்லையின் சட்டங்களின்படி செல்லாததாக அல்லது அமல்படுத்த முடியாததாக இருந்தால், அத்தகு அட்டவிதி இந்த விதிகளின் பிற விதிமுறைகளை பாதிக்கவோ அல்லது அதன் சட்டப்பூர்வ நிலையை, செல்லத்தக்க தன்மையை அல்லது அமலாக்கதன்மையை முடக்கவோ செய்யாது. அதேபோல பிற ஆட்சியெல்லைகளின் அத்தகு சட்டவிதிகளை பாதிக்கவோ அல்லது சட்டப்பூர்வ நிலையை, செல்லத்தக்க தன்மையை அல்லது அமலாக்கதன்மையை முடக்கவோ செய்யாது.