TOPONE Markets முன்னணி எழுத்தாளர் செயல்திட்ட ஒப்பந்தம்
TOPONE Markets முன்னணி எழுத்தாளர் செயல்திட்ட ஒப்பந்தம்
1. பதிவுசெய்தல்:
படைப்பாளிக்கு முழுமையான காப்புரிமை இருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளில் பதிப்புரிமை மீறல் அல்லது 3ம் தரப்பினரிடம் சட்டப்பூர்வ அனுமதிபெற்று அதைத் தனிப்பட சுட்டிக்காட்டியிருக்கக் கூடாது. முதலீட்டில் இயங்கக்கூடிய தனிப்பட்ட படைப்பாளிகள், தாக்கத்தை ஏற்படுத்துவோர், முதலீட்டு நிபுணர்கள், தனி ஊடகப் பணியாளர்கள் மற்றும் மூத்த டிரேடர்கள் போன்ற அனைவரையும் நாங்கள் ஏற்கிறோம்.
2. தகுதி:
நீங்கள் வெளியிட்ட தலைப்பு முதல் 6 இடங்களில் பிரபல தலைப்புகளுக்கான பில்போர்டில் வரும்போது, முன்னணி எழுத்தாளர் திட்டத்துக்கு விண்ணப்பிக்க உங்களுக்குத் தகுதியுண்டு. செயலியில் உள்ள ”முன்னணி எழுத்தாளர் திட்டம்” பிரிவின் கீழும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
3. தேவையானவை:
(1) ஒரு கண்ணியமான சுயவிபரப் படம், இணங்குபவரின் பயனர்பெயர் மற்றும் சுய அறிமுகம்;
(2) போர்னோகிராபி, வன்முறை, அவதூறு, தனிப்பட்ட தாக்குதல்கள், மத அரசியல் பிரச்சினைகள் அல்லது அநாகரீகமான உள்ளடக்கங்கள் தடைசெய்யப்படுகின்றன;
(3) படைப்பாளிக்கு முழுமையான காப்புரிமை இருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளில் பதிப்புரிமை மீறல் அல்லது 3ம் தரப்பினரிடம் சட்டப்பூர்வ அனுமதிபெற்று அதைத் தனிப்பட சுட்டிக்காட்டியிருக்கக் கூடாது. அதேநேரம், நாங்கள் மறுபதிப்பை, எழுத்துத் திருட்டை அல்லது மற்றவர்களின் எழுத்தைப் பயன்படுத்துவதையும் மற்றவர்களின் பதிப்புரிமையை மீறுவதையும் நாங்கள் மறுக்கிறோம்.
(4) A3ம் தரப்பு பிராண்டுகள், லோகோக்கள், நீர்வரிகள் மற்றும் எந்தவொரு விளம்பரங்களையும் உள்ளடக்கத்தில் நாங்கள் அனுமதிப்பதில்லை;
(5) அதேபோல படைப்பில் பிராண்டை மறைக்கக்கூடிய எந்த வடிவங்களையும், லோகோ, நீர்வரி அல்லது பிற உள்ளடக்கத்தையும் நாங்கள் ஏற்பதில்லை.
4. பணமளிப்பு:
பின்வரும் விதிகள் பொருந்தும்:
(1) வளாகத்துக்குள் நபர் அ இந்த ஒப்பந்தத்தின் விண்ணப்ப காலத்தின்போது எந்த மீறலிலும் ஈடுபடவில்லையெனில், ஒவ்வொரு புதிய பின்தொடர்வோர் சேரும்போதும் உங்களுக்கு $1 USD வழங்கப்படும். அதற்குப் பிறகு ஒருவர் உங்களைப் பின் தொடர்வதை நிறுத்தினால், உங்களைப் பின் தொடர்வோரின் எண்ணிக்கை சென்ற செட்டில்மெண்டின் தொகையைவிட அதிகம் இருக்கும்போது உங்கள் ரொக்கக் கழிவை மட்டும் பெறுவீர்கள்.
(2) கணக்கீடு:
தற்போதைய ரொக்கத் தள்ளுபடி செட்டில்மெண்ட் = (தற்போதைய உண்மையான பின்தொடர்பவர் தொகை - கடைசியாக செட்டிலான பின்தொடர்வோர் தொகை) x $1 USD
(3) உங்கள் ரொக்கக் கழிவு வாரம்தோறும் செட்டில் செய்யப்படும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் ரொக்கக் கழிவு உள்ளபடி கணக்கிடப்பட்டு உங்கள் TOPONE Markets கணக்கிருப்பில் டெபாசிட் செய்யப்படும். மொத்தம் சேர்ந்துள்ள ரொக்கக் கழிவு $20யைத் தாண்டும்போது, நீங்கள் அதை எடுக்க விண்ணப்பிக்கலாம்.
5. பணம் எடுப்பு:
(1) ID சரிபார்ப்பு: நீங்கள் அடையாள சரிபார்ப்பை நிறைவுசெய்ய வேண்டும். (முதல்முறை பணமெடுக்கும்போது மட்டுமே தேவை.)
(2) வங்கி சரிபார்ப்பு: பயனாளர் கணக்கை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். (முதல்முறை பணமெடுக்கும்போது மட்டுமே தேவை)
(3) நீங்கள் (1) & (2) சரிபார்ப்பை நிறைவுசெய்ததும், நீங்கள் பணமெடுக்கும் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். உங்கள் பணமெடுக்கும் கோரிக்கையை நாங்கள் ஏற்றபின், உங்கள் வங்கி அதைச் செயல்படுத்த 2 முதல் 3 வேலைநாட்களை எடுக்கலாம். (சட்டப்பூர்வ விடுமுறைகள் நீங்கலாக)
(4) ஒவ்வொரு பணமெடுக்கும் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் முன்பாகவும், நீங்கள் ஏற்கெனவே குறைந்தது $20 ரொக்கக் கழிவு ஈட்டியுள்ளதை றுதிப்படுத்திக் கொள்ளுங்கள். $20க்குக் குறைவான பணமெடுக்கும் கோரிக்கைகள் ஏற்கப்பட மாட்டாது.
6. விதி மீறல்
(1) 3ம் தரப்பினரின் அங்கீகாரம் இன்றி அவர்களது எழுத்தை வெளியிடுதல், நேரடியான எழுத்துத் திருட்டு போன்றவை உள்ளிட்ட ஏனைய நகலெடுத்து ஒட்டுதலைச் செய்யாதீர்கள்.
(2) போர்னோகிராபி, வன்முறை, அவதூறு, தனிப்பட்ட தாக்குதல்கள், மதப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள், அநாகரீகமான எழுத்துக்கள் மற்றும் ஏதேனும் வணிக விளம்பரங்கள், ஆட்கள் பார்ப்பதற்காக தவறாகப் பயன்படுத்துதல் போன்றவை உள்ள பிரதிகள் தடைசெய்யப்படுகின்றன.
(3) எந்த 3ம் தரப்புகளும் பிற நிறுவன நீர்வரிகளும் படங்கள் திருடப்பட்டு மறைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் எந்தச் சூழ்நிலைகளும் தடைசெய்யப்படுகின்றன.
(4) ஏதேனும் வடிவில் மென்பொருளைப் பயன்படுத்துதல் அல்லது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பின்தொடர்வோர் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும் பின்னூட்டமிடுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் ஏமாற்றுவேலையில் ஈடுபடுவதாக நிறுவனம் கருதுவது உள்ளிட்ட ஏனைய எந்த நேர்மையற்ற நடத்தைகளோ அல்லது ஏமாற்று முறைகளோ தடைசெய்யப்படுகின்றன.
(5) முன்னணி எழுத்தாளர் திட்டத்தில் சேர்ந்த பின், எங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தை உங்கள் தரப்பிலிருந்து நீக்குவது கடுமையான, எதிர்மறைத் தாக்கத்தை உங்கள் ரொக்கக் கழிவு ஈட்டுதலில் ஏற்படுத்தும். அதிகளவில் மொத்தமாக வெளியிடப்பட்ட படைப்புகளை நீக்குவது ஒப்பந்த மீறலாகக் கருதப்படும்.
7. தண்டனை
TOPONE Markets உங்கள் நடத்தை அல்லது செயல்கள் மேற்குறிப்பிட்ட தொடர்புடைய உள்ளடக்கங்களில் இருப்பதாகக் கண்டறிந்தால், தனிப்பட்ட மீறல்களைப் பொறுத்து அது தொடர்பான அபராதங்களை நாங்கள் ஒருமனதாக விதிக்கக்கூடும்:
(1) பொதுவான மீறல் - சிறிய விதிமீறல்களைச் செய்தவர்கள், (1), (2), (3) ஆகியவற்றில் ஏதேனும் மீறல்கள் இருந்தால் மேலே குறிப்பிட்ட “6 மீறல்கள்”; பின்வரும் அபராதங்களை நிறுவனம் விதிக்கும்: முதல்முறை விதிகளை மீறியோருக்கு எச்சரிக்கையும் தண்டனைக்கான நேரடிச் செய்தியும் எங்களிடமிருந்து வரும். மீறியவர்கள் தங்கள் தவறைத் திருத்திக்கொள்ள ஒருவார கால அவகாசமளிக்கப்படும். சரிப்படுத்தும் காலத்துக்குப்பின் நாங்கள் திரும்ப அதைச் சரிபார்ப்போம். சரிபார்ப்பு முடிந்தபின், எழுத்தாளர் தொடர்ந்து உரிமைகளையும் இந்த முன்னணி எழுத்தாளர் திட்டத்துக்கான தகுதியையும் வைத்திருக்கலாம். படைப்பாளி பட்டியலில் தடைசெய்யப்பட்ட ஒன்றில் திரும்பவும் பங்குபெறுகிறார் எனில், நாங்கள் ஏகமனதாக உடனடியாக முன்னணி எழுத்தாளர் திட்டப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவரின் அனைத்து உரிமைகளையும் பலன்களையும் நீக்கி, கணக்கில் பட்டியலில் நீக்கப்பட்ட நபர் பெற்ற அனைத்து ரொக்கக் கழிவுகளையும் உறையச் செய்வதுடன், தொடர்புடைய தகுதிகள் போன்றவற்றை இழக்கச் செய்வோம்.
(2) பெரியளவில் மீறல் - தவறான குணத்துடன், அதாவது நேர்மையற்ற வழிகளில், வடிவங்கள் அல்லது படிவங்களைப் பயன்படுத்தி நேரடியாக அல்லது மறைமுகமாக பின்தொடர்வோரையும் பின்னூட்டமிடுவோரையும் அதிகரிப்பது அல்லது பெரியளவில் தீயநோக்கத்துடன் உள்ளடக்கங்களை அல்லது மற்றவர்களின் உள்ளடக்கங்களை நகலெடுத்து & ஒட்டுவது. சட்டத்துக்குப் புறம்பான உள்ளடக்கத்தில் மொத்தம் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தில் 30%க்கு மேல் இருப்பது. முன்னணி எழுத்தாளரின் உரிமைகளும் சலுகைகளும் உடனடியாக முடித்துவைக்கப்பட்டு, கணக்கில் இருக்கக்கூடிய அனைத்து ரொக்கக்கழிவுகளும் உறைய வைக்கப்படும். உங்களுக்கு நிறுவனத்தின் நேரடிச் செய்தி மூலம் தெரிவிக்கப்படும். மேற்கண்ட விதிமிறலுக்கான தண்டனை முடிவுகள் மீது மேல்முறையீட்டுக்கான காலம், அதிகாரப்பூர்வ எச்சரிக்கை மற்றும் தண்டனைக்கான தனிப்பட்ட செய்தியைப் பெற்ற நாளிலிருந்து ஏழு வேலை நாட்கள். இந்தக் காலகட்டத்தில், TOPONE Markets மென்பொருளிலுள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலரை மேல்முறையீட்டுக்காகத் தொடர்புகொள்ளலாம்.
8. புகாரளித்தல்
புகாரளித்தல் அமைப்பு: TOPONE Markets தானியங்கி மதிப்பீட்டு அமைப்பின்கீழ் முதலீட்டாளர்களிடமிருந்து புகாரைப் பெற்றபின், எங்கள் சமூக நிர்வாகி கைப்பட மீறல்களைச் சரிபார்ப்பார். முறையற்ற உள்ளடக்கங்களை நீங்கள் TOPONE Markets செயலியிலுள்ள வாடிக்கையாளர் சேவை வாயிலாக நீங்கள் புகாரளிக்கலாம். சிறப்பான விசாரணைக்காக தயவுசெய்து முடிந்தவரை காரணத்தையும் விபரங்களையும் வழங்குங்கள். (உதாரணம்: நகலெடுத்து & ஒட்டுதல் நடத்தையைப் புகாரளித்தல்: அனைத்து ஸ்கிரீன்ஷாட்டுகள், இணைப்புகள், அசல் எழுத்தாளர்கள், உள்ளடக்கத்தின் கட்டுரைத் தலைப்புகள் அல்லது நீங்கள் மேலும் பெறக்கூடிய மற்றவை அனைத்தும் சரியாக வழங்கப்பட வேண்டும்.)